கீழரங்கம்

கீழரங்கம்


ஸ்ரீ பூர்வரங்கநாயகி சமேத ஸ்ரீ பூர்வரங்கநாதர் திருக்கோயில் கீழையூர், நாகை மாவட்டம்
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத்துயிலுமா கண்டு உடலெனக் குருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே !

முதற்பக்கம்தலவரலாறுநிகழ்வுகள்புகைப்படங்கள்ஆவணங்கள்செல்வது எப்படிதொடர்புக்கு
 திருத்தலம் தொடர்புடைய பாடல்கள்

அம்ருத ரஸஜரீனாம் அந்தரங்கை : அபாங்கை
அவனத ஜனதாயா : ஹர்ஷமங்கூரயந்தம்
கமபி ஜலதி கன்யா மேதினீ காந்தமேகம்
புருஷ்மஹம பஸ்யம் பூர்வரங்கே ஸயானம்  

- மார்க்கண்டேய மகரிஷி
 

குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத்துயிலுமா கண்டு
உடலெனக் குருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே !

- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
 

பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே
அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

- குலசேகர ஆழ்வார்
 

பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்
சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 

- திருமங்கை ஆழ்வார்

 Home Contact