கீழரங்கம்

கீழரங்கம்


ஸ்ரீ பூர்வரங்கநாயகி சமேத ஸ்ரீ பூர்வரங்கநாதர் திருக்கோயில் கீழையூர், நாகை மாவட்டம்
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத்துயிலுமா கண்டு உடலெனக் குருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே !

முதற்பக்கம்தலவரலாறுபாடல்கள்நிகழ்வுகள்புகைப்படங்கள்ஆவணங்கள்தொடர்புக்கு
செல்வது எப்படி?

இந்த திருக்கோயில் தமிழகத்தில் நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் (611103) அமைந்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கீழையுர் செல்லும் சாலை வரைபடம் கீழே :


நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், நாகப்பட்டினம் புத்தூர் சந்திப்பில் இருந்து 20 கீ.மீ தொலைவில் திருப்பூண்டியை அடுத்து அமைந்துள்ளது கீழையூர்.

நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை மூலம் இயக்கப் படும் பேருந்துகள் மூலம் கீழையூரை அடையலாம். 

சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகூர் வழியாக நாகபட்டினம் நகரை அடையலாம் (311 கீ.மீ). திருச்சியிலிருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாகவும் நாகபட்டினம் நகரை அடையலாம் (141 கீ.மீ). 

நாகபட்டினம் நகருக்கு சென்னையிலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் புகைவண்டி வசதியும் உள்ளது.

அருகாமையிலிருக்கும் விமான நிலையங்கள் : சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர். 



Home Contact