கீழரங்கம்

கீழரங்கம்


ஸ்ரீ பூர்வரங்கநாயகி சமேத ஸ்ரீ பூர்வரங்கநாதர் திருக்கோயில் கீழையூர், நாகை மாவட்டம்
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத்துயிலுமா கண்டு உடலெனக் குருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே !

முதற்பக்கம்பாடல்கள்நிகழ்வுகள்புகைப்படங்கள்ஆவணங்கள்செல்வது எப்படிதொடர்புக்கு
தல வரலாறு

கீழையூர் என்கிற கீழரெங்க க்ஷேத்ரமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் புத்தூர் சந்திப்பில் இருந்து 20 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பஞ்சரெங்க க்ஷேத்ரங்களான ஸ்ரீரெங்கம், வடரெங்கம், ஆதிரெங்கம், மேலரெங்கம், கீழரெங்கத்தில் இவ்வூர் கிழக்கே அமைந்திருப்பதால் கீழரெங்கம் என்ற கீழையூராயிற்று.

9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ள இத் திருக்கோயில் புராதன மாடக்கோயிலாக அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் இந்த க்ஷேத்திரத்தின் வடபால் அமைந்துள்ள கங்கையிற் புனிதமான காவிரியின் சந்தரநதிக்கரையில் தபம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷியின் மேல் கருணை கொண்டு ஓர் இடையனப் போல மாடுகளை மேய்த்த வண்ணம் பெருமாள் குழலிசைக்க மகரிஷி அந்த தேவகானத்தை கேட்டு ஞான திருஷ்டியால் வந்திருப்பது பரந்தாமனே என்று உணர்ந்து எம்பெருமான் திருவடிகளை பணிந்தார். பெருமாளும் தைமாதம் 2ம் நாள் கருடாரூராய் மகரிஷிக்கு ஸேவை ஸாதித்து உமக்கு யாது வேண்டும் என்று வினவ அடியேனுக்கு திருவரங்கத்தைப் போலவே ஸேவை சாதிக்க வேணுமெனப் பிரார்த்திக்க,

குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத்துயிலுமா கண்டு
உடலெனக் குருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே !

என்னும் தொண்டரப்பொடி ஆழ்வார் பாசுரப்படி, மேற்கே திருமுடியையும், கிழக்கே திருவடியையும் வடக்கே பின்புறமாக தெற்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் ஸேவை ஸாதித்து அருளினார்.

இவ்வாறான பள்ளிகொண்ட பரந்தாமனை தரிசித்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்த மார்க்கண்டேயர் பின்வருமாறு மங்களாசாசனம் செய்தருளினார்.

அம்ருத ரஸஜரீனாம் அந்தரங்கை : அபாங்கை
அவனத ஜனதாயா : ஹர்ஷமங்கூரயந்தம்
கமபி ஜலதி கன்யா மேதினீ காந்தமேகம்
புருஷ்மஹம பஸ்யம் பூர்வரங்கே ஸயானம்

என்று இந்த பூர்வ ரெங்க க்ஷேத்ரத்தில் ஸயனத்தில் உள்ள எம்பெருமானைப் பார்த்து அமிர்தம் கிட்டியது போன்ற சந்தோஷத்தை அடைந்ததாக ஸ்லோகம் இட்டருளினார்.

எம்பெருமானின் ஸயன திருக்கோலம் நான்கு விதமாக இருப்பதை சாஸ்திரங்கள் கூறுகிறன்றன. அவை யோகம், போகம், வீரம், விரகம்.

இங்கே ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் யோக சயனமாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு பூமிதேவியுடன் மார்க்கண்டேய மகரிஷியுடன் ஸேவை சாதிக்கிறார். இப்பெருமாளை நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சேவித்தால், தோஷம் அகலும். ஆதிசேஷனுக்கு அமாவாசை அன்று நெய்தீபம் இட்டு, ராகு தோஷ நிவர்த்தி அடையலாம்.

திருமணம் கைகூட, மகப்பேறு உண்டாக இங்குள்ள புஷ்கரணியில் நீராடி ஆதிசேஷனை வழிபட்டு நீலவஸ்திர தானம், உளுந்து தானம் செய்து, உளுந்து சாதம் நெய்வேதியம் செய்தும் இந்த சன்னதியில் உள்ள சந்தான கிருஷ்ணனுக்கு கல்கண்டும் வெண்ணையும் நிவேதனம் செய்து வழிபட்டு குழந்தை செல்வம் அடைகின்றனர்.

மூலவர், கௌதமர், உத்ஸவர், ஸ்நபனபேரர், பலிபேரர் என ஐந்து நிலைகளில் ஆகம விதிப்படி இங்கு மூர்த்திகள் எழுந்தருளி உள்ளார்கள்.

“ஆயனாய் அன்று குன்றமொன்றெடுத்தான்”

என்ற பாசுரப்படியும், மார்க்கண்டேயருக்கு இடையனாக குழலிசைத்தாலும், உத்ஸவருக்கு ஆயனார் என்று திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீ ரெங்கத்தைப் போலவே இந்த க்ஷேத்திரமும் தெற்கு திசையில் கோபுர வாசலுடன் இருப்பது சிறப்பாகும்.

தலவரலாறு புத்தகத்தை இங்கே பதிவிறக்கம் செய்கHome Contact